தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் திமுக வெற்றி பெற்றதையடுத்து அதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் மல்லிப்பட்டினம் வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்களுக்கு திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்து சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அவர்கள் தன்னுடைய வெற்றிக்கு உழைத்ததற்கும், அதிகப்படியான வாக்குகளை அளித்ததற்கும் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாகிர், மாவட்டக் கழக பிரதிநிதி, கிளைக் கழகச் செயலாளர் ஹபி முஹம்மத், மீனவர் நல வாரிய துணைத் தலைவர் தாஜுதீன், ஜமாத் தலைவர் அல்லா பிச்சை, ஊராட்சி மன்ற தலைவர் ஜின்னா, மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Post a Comment