மல்லிப்பட்டினத்தில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டம்,பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கல்.!

 



தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே கல்வி தந்தை கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் காங்கிரஸ் கட்சி  கொடியேற்றப்பட்டது.

மேலும் சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட மல்லிப்பட்டினம் தொடக்கப்பள்ளி, தெற்கு நடுநிலைப்பள்ளி,சின்னமனை ,நடுநிலைப்பள்ளி, மல்லிப்பட்டினம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவர், மாணவிகளுக்கு  நோட்டு,புத்தகங்கள்,பேனா,ஆகியவை, தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்,சேதுபாவாசத்திரம் வட்டார  சார்பில்மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயளாலர் கமால்பாட்சாவும் ,வட்டார காங்கிரஸ் தலைவர் சேக் இபுறாகிம்சாவும் வழங்கினார்கள்.

கொடியேற்ற நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர் கமால்பாட்சா,சேதுபாவாசத்திரம் வடக்கு வட்டாரத் தலைவர் சேக் இபுறாகிம்சா,K.வடுகநாதன்,மாவட்ட மீனவர்அணி, புதுப்பட்டினம் நகரத்தலைவர் ரெங்கசாமி,புதுப்பட்டினம்,முத்துபொதியன்,மல்லிப்பட்டினம் அப்துல் ஜப்பார்,ஆகியோர் கலந்துகொண்டனர்.




Post a Comment

Previous Post Next Post