கடலில் காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி,நிவாரணம் வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி.!

 



தஞ்சை மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி,மல்லிப்பட்டினத்தில் கடந்த வாரம் பைபர் படகில் நான்கு பேர் மீன்பிடிக்க சென்ற படகு கவிழ்ந்து நீரில் மூழ்கியது, இதில் மூவர் காப்பற்றப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.

அந்தோணி என்பவர் மட்டும் மீனவர்கள்,மீன்வளத்துறை அதிகாரிகள் தேடியும் கிடைக்கவில்லை,இதனால் மிகுந்த சோகத்தில் குடும்பம் மூழ்கியது.இந்நிலையில் கணவரை இழந்து வாடும் குடும்பத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்  முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோர்  நிவாரணத் தொகை வழங்கினர்.

இதில் மாவட்ட மீனவர் அணி தலைவர் அபுதாஹீர், மாவட்ட கழகப் பிரதிநிதி , விசை படகு சங்க தலைவர் ஹபீப் முகமது, மீனவர் வாரிய துணைத்தலைவர் தாஜுதீன், ஊராட்சி மன்ற தலைவர் ஜின்னா, மல்லிப்பட்டினம் ஜமாத் தலைவர் அல்லா பிச்சை, ஜமாத் செயலாளர் அப்துல் ரஹீம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாசிலாமணி, சங்க உறுப்பினர்கள் மீனவர்கள் திரளாக கலந்து கொண்டனர்




Post a Comment

Previous Post Next Post