தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் தமுமுக 30ஆம் ஆண்டு துவக்க தினத்தை ஒட்டி கொடியேற்ற நிகழ்வும், தமுமுக மமக புதிய அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியும் மல்லிப்பட்டினம் கிளை தலைவர் செய்யது புகாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
தமுமுக மமக கொடியேற்ற நிகழ்வு மற்றும் புதிய அலுவலக நிகழ்விற்கு தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அதிரை அப்துல் மாலிக்,மமக மாவட்ட செயலாளர் மல்லிப்பட்டினம் அப்துல் பகத் அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மமக மாநில துணைப்பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு கொடியேற்றி,புதிய அலுவலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
இறுதியாக தமுமுக துணை செயலாளர் அக்ரம் நன்றியுரையாற்றினார்.
இந்நிகழ்வில் அதிரை,மதுக்கூர் தமுமுக மமக நிர்வாகிகள், திமுக,காங்கிரஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி,தர்ஹா கமிட்டி,மல்லிப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய நலமன்ற நிர்வாகிகள்,மல்லிப்பட்டினம் ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் மல்லிப்பட்டினம் கிளை தமுமுக மமக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
Post a Comment