சேதுபாவாசத்திரம் ஒன்றிய தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் திமுக முப்பெரும் விழாவில் திரளானோர் பங்கேற்பு.!




 திமுக சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17ம் தேதி பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவோடு சேர்த்து பவள விழாவும் நேற்று (செப் 17) சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன், பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மு.க.ஸ்டாலின் விருதை' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சார்பில் ஒன்றிய பெருந்தலைவர் முத்துமாணிக்கம் தலைமையில் மல்லிப்பட்டினம் கிளை செயலாளர்,மாவட்ட பிரதிநிதி ஹபீப் முகமது உள்ளிட்ட சேதுபாவாசத்திரம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post