பட்டுக்கோட்டையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.6.5 லட்சம் - தங்க நகைகள் திருட்டு

 



பட்டுக்கோட்டையில் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து ரூ. 6. 5 லட்சம் மற்றும் தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.


தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை நகர் லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஜாக் (வயது 62) வியாபாரி. இவருக்கு சொந்தமான வீட்டை ரூ. 6 லட்சத்து 60 ஆயிரத்துக்கு விற்றுள்ளார். பின்னர், அந்த பணத்தை அப்துல்ரஜாக், தற்போது வசித்து வரும் வீட்டில் வைத்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளாவிற்கு சென்றுள்ளார். அவருடைய மனைவி, பாப்பாநாட்டில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று அங்கு தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில் அப்துல்ரஜாக்கின் வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், இதுகுறித்து அப்துல் ரஜாக்கிற்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அப்துல் ரஜாக் கேரளாவில் இருந்து திரும்பி வந்து வீட்டில் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூபாய் 6 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் மற்றும் தோடு, ஜிமிக்கி, உள்ளிட்ட ஒன்றரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அப்துல்ரஜாக் பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

Previous Post Next Post