தஞ்சாவூர் மாவட்டம்,சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டினம் உமர்புலவர் தெருவில் பொதுமக்கள் அதிகமாக செல்லும் சாலை மிகவும் சுகாதார சீர்கேடாக காட்சியளிக்கிறது மழைநீர் வடிகால் தூர்ந்து போய் உள்ளது,சாலையே குப்பைகளாகவும் இருப்பதால் அந்த பகுதியில் கொசு உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.
இதனால் டெங்கு,மலேரியா,வைரஸ் காய்ச்சல் ஆகியவை பரவக்கூடிய அபாயம் உள்ளது இதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக ஆய்வு செய்து வடிகால் மற்றும் சாலையை சுத்தம் செய்து வடிகாலுக்கு மூடி அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
Post a Comment