இன்று14.11.24 வியாழக்கிழமை பகல் 2 மணி அளவில் தஞ்சை மாவட்டம் விசைப்படகு மீனவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் A. ராஜமாணிக்கம் தலைமையில் செயலாளர் K.வடுகநாதன் மற்றும் தஞ்சை மாவட்ட அனைத்து ஊர் விசைப்படகு சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கை என் : 1
தற்போது டீசல் விலை அதிகரிப்பினாலும் உதிரி பாகங்கள் விலை முன் எப்போதும் இல்லாத அளவில் அதிகரித்து இருப்பதாளும் இலங்கை பிரச்சனையாளும் மிகப்பெரிய வாழ்வாதார இழப்பை மீனவர்கள் சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கடல் ஒழுங்குமுறை சட்டம் என்ற பெயரில் மூன்று நாட்டிகள் மைல் என்பதை ஐந்து நாட்டிக்கல் மயிலுக்கு அப்பால் தான் மீன்பிடிக்க வேண்டும் என்ற சட்டத்தை அமுல்படுத்தி உள்ளார்கள். இதனால் குறுகிய கடல் பகுதியும் மிகவும் ஆழம் குறைந்த பகுதியாகவும் வடக்கே கோடியக்கரை முதல் தெற்கு ராமேஸ்வரம் வரை உள்ள பகுதி மேற்கொண்டவாறு உள்ளதால் மீன்பிடிக்க இடம் இல்லாமல் அடிக்கடி எல்லை தாண்டும் பிரச்சினை அதிகரித்து உள்ளது இந்நிலை மேற்கண்ட சட்டம் போட்ட பிறகு அதிகமாக உள்ளது இதனால் மீனவர்கள் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள் உடலுக்கும் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பில்லாமல் வாழ்வா சாவா போராட்டத்திற்கு மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே இச்சட்டத்தை மாற்றி பழைய மாதிரி இப்பகுதிக்கு மட்டுமாவது மூன்று நாட்டிகள் மயில் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கையை நிறைவேற்றி தர கேட்டுக்கொள்கிறோம்.
கோரிக்கைத் தீர்மானம் :2
தஞ்சை,புதுகை, ராமநாதபுரமும் மாவட்டத்தில் எஞ்சின் பொருத்தப்பட்ட FRP படகு கடந்த சில ஆண்டுகளுக்குள் பல ஆயிரக்கணக்கில் அதிகரித்துள்ளதால் அவர்கள் பயன்படுத்தும் வலைகள் ஆயிரம் முதல் 2000 கிலோ வரை எடை உள்ளதால் கடலில் அவர்கள் விரித்து மீன் பிடிக்கும் போது விசைப்படகுகள் அங்கு சென்று மீன்பிடிக்க இடமில்லாமல் எல்லை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட FRP படகுகள் விசை படுகலுக்கிடையே மேற்கண்ட 3 மாவட்டங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு விசைப்படகுகள் மூன்று நாட்களும் அன்றைய நிலையில் 19 78 காலகட்டத்தில் வெறும் பாய் மரபாக இருந்த போது நாட்டுப் படுகளுக்கு நான்கு நாட்களும் ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போதைய நிலையில் பாய் மரப்படகு மாரி FRP என்னும் பைபர் கிளாஸ் படகுகளில் வெளிப்பொருத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டு நீண்ட தூரம் விசைப்படகு போல் தொழில் புரிவதாலும் அவர்கள் வைத்திருக்கும் வலைகள் கடலில் நீண்ட தூரம் மூன்று கிலோ மீட்டர்வரை போடுவதாலும் விசைப்படகுகளுக்கு தொழில் புரிய இடமில்லாமல் எல்லை தாண்டி மீன்பிடிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே விசைப்படைகளில் நிலை அறிந்து முன் போல் போடப்பட்ட ஒப்பந்தப்படி விசைப்படகுகளுக்குமூன்று நாட்களும் தற்போதைய வெளிப்பொருத்தும் இயந்திரத்தோடு வந்திருக்கும் FRPபடகு கலுக்கு நான்கு நாட்களும் தொழில் புரிய அரசே கவனம் எடுத்து பிரச்சினைகள் ஏற்படாமல் ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் விசைப்படகேகளுக்கு கோடிய கரைக்கு தென்கிழக்கே சென்று மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை தங்கி மீன்பிடிக்க அனுமதி வழங்கினால் டீசல் சிலவினத்தில் சிக்கனம் ஏற்படுவது டன் எல்லை தாண்டும் பிரச்சனையும் இருக்காது FRPபடகுகளுடன் பிரச்சனைகள் ஏற்படாது. மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினையில் கருத்தில் கொண்டு வாழ்வாதாரத்தை உயர்த்திட இதனை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
கோரிக்கை என் : 3
தஞ்சை மாவட்ட பகுதியான சேதுபா சத்திரம், கழுமங்குடா, மல்லிப்பட்டினம் போன்ற பகுதிகளில் வெளி மாவட்டத்தில் இருந்தும் வெளிமாநிலத்தில் இருந்தும் மேற்கண்ட கடற்கரை பகுதிகளில் அங்கிருந்து மீன்களை கொண்டு வந்து விற்பதால் சுகாதாரக் கேட்டுடன் நிறைய அழுகிய மீன்கள் விற்கப்படுகின்றன. பிரச்சனைகளும் ஏற்படுகின்றன காரணம் தஞ்சை மாவட்ட மீனவர்களால் பிடித்து கொண்டுவரப்படும் மீன்கள் இங்கு சரியான முறையான விலைக்கு விற்கப்படுவதில்லை. இங்குள்ள மீன்வர்களின் மீன்கள் தரமான மீன்களாக இருந்தும் தரம் குறைந்து பழைய மீன்களை குறைந்த விலைக்கு கொடுப்பதால் இங்கு உள்ள மீனவர்களின் மீன்கள் விற்கமுடிவதில்லை இதனால் மீனவர்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். இது சம்பந்தமாக மீன்வள துறை இடம் தெரிவித்தும் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனையான இந்த பிரச்சனைகளை கலைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து வெளி மாவட்ட வெளி மாநில மீன்களை கொண்டு வந்து விற்கும் வியாபாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கமாக இங்கு விற்கப்படும் மீன்களே விற்பனை செய்ய படவேண்டும் இதனை நிறைவேற்றித் தர கேட்டுக் கொள்கிறோம் .
கோரிக்கை என் : 4
நாட்டுப் படகு, விசைப்படகுளுக்கு இடையே சுமூகமாகவும் புரிந்துணர்வுடன் தொழில் புரிந்து வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லிவயல் தோட்டம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் போன்ற பகுதிகளில் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாக கூறி மீன்துறையை குற்றம் சுமத்தி வன்முறையை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் நாட்டுபடகு என்ற பெயரில் அறிக்கை மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அந்தந்த மீனவர் கிராமங்களில் உள்ள மீனவர்களை தூண்டும் விதமாக சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வண்ணம் சில நாசக்கார விளைவுகளை ஏற்படுத்த தூண்டுபவர்களின் மீது காவல்துறை அடையாளம் கண்டு கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இரு தரப்பினரும் சுமூகமாக தொழில் செய்ய உதவிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
மேற்கண்ட கோரிக்கைகளை தமிழக அரசை வலியுறுத்தும் விதமாக தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என கோரிக்கையுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
Post a Comment