மல்லிப்பட்டினத்தில் தண்ணீரில் கண்ணீரோடு வாழும் மக்கள், கோரிக்கை நிறைவேற்றப்படுமா.?

 



தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் ,இரண்டாம்புளிக்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ள காயிதே மில்லத் நகரில் மழையால் பாதிகப்பட்ட மக்களுக்கு உதவிட சமூக ஆர்வலர்கள்,அமைப்புகள்,அரசியல் கட்சியை சேர்ந்த இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள  பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர்.அதன்ஒரு பகுதியாக காயிதே மில்லத் நகரில் பொதுமக்களின் வீடுகள் மழை நீரால் சூழப்பட்டு இருக்கிறது.இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஆதலால் இதனை சரிசெய்திட சமூக ஆர்வலர்களுக்கு,அரசியல் கட்சிகளுக்கு,இளைஞர்களுக்கு அப்பகுதி மக்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.மேலும் இதனை உடனடியாக அரசு சரிசெய்திடவும் கோரிக்கை விடுத்தனர்.







Post a Comment

Previous Post Next Post