துபாய் நகர முழுவதும் போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக, துபாய் சாலிக் மற்றும் பார்க்கிங் கட்டணங்கள் கொள்கைகளை செயல்படுத்து உள்ளதாக துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
துபாயில் உள்ள டோல்கேட் மற்றும் பார்க்கிங் இடங்களுக்கு எப்படி கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது என்பதை இங்கே பார்ப்போம்.
2025-ம் ஆண்டு ஜனவரி இறுதி முதல், வார நாட்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டோல்கேட் கட்டணம் 6 திர்ஹாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் அதிகாலை 1 மணி வரை 4 திர்ஹாம்.
மேலும், ஞாயிற்றுக்கிழமை, பொது விடுமுறை நாட்கள் தவிர, முக்கிய தினங்கள் நாள் முழுவதும் 4 திர்ஹாம் வசூலிக்கப்படும். அதிகாலை 1 மணி முதல் காலை 6 மணிக்கு வரை இலவசம்.
மார்ச் 2025 முதல் புதிய பார்க்கிங் கட்டணங்கள்: புதிய பார்க்கிங் கட்டண கொள்கைகளின்படி, காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை, இந்த இடைப்பட்ட நேரங்களில் பிரீமியம் பார்க்கிங் இடங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 6 திர்ஹாம். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரை பொது பார்க்கிங் கட்டணம் 4 திர்ஹாம் என நிர்ணயம் செய்துள்ளன.
காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணம் மாறாமல் இருக்கும். இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை தினங்களில் பார்க்கிங் இலவசம்.
மேலும், பிப்ரவரி 2025 முதல் முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும் பொது பார்க்கிங் மண்டலங்களுக்கு 25 திர்ஹாம் கட்டணங்கள். அதுவும் குறிப்பாக, துபாய் வர்த்தகம் மையத்தில் சுற்றியுள்ள மண்டலங்களுக்கு இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment