தெற்கு, மத்திய வங்கக்கடலில் நிலவி வரும் காற்று சுழற்சி படி படியாக மேற்கு நோக்கி தெற்கு இலங்கை, குமரி கடல், மாலத்தீவு வழியாக அரபிக்கடலுக்கு நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்த 48, 78 மணி நேரத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பதிவாகலாம்.
குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பரவலாக மழைக்கும் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
மற்ற டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட கடலோர பகுதிகளில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பதிவாகலாம்.
மேலும் தென் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஆங்காங்கே பல பகுதிகளில் மழை பதிவாகலாம்.
மற்ற உள் மாவட்டங்களில் ஆங்காங்கே, ஒரு சில பகுதிகளில் லேசான, மிதமான மழை இருக்கக்கூடும்.
Post a Comment