மல்லிப்பட்டினத்தில் பழமையான நீர்த்தேக்க தொட்டி இடிப்பு.!

 


தஞ்சை மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைந்திருந்தது. சுமார் 35 ஆண்டுகளுக்கு மேலான  பழமையான இந்த தொட்டியின் தூண்கள் அனைத்தும் வலுவிழந்த நிலையில் காணப்பட்டது.அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் வழியாக இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக  அதனை அப்புறப்படுத்தி புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட வேண்டுமென பஞ்சாயத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அந்த தொட்டி பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது. 

அந்த இடத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளதாக பஞ்சாயத்து நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.











Post a Comment

Previous Post Next Post