மல்லிப்பட்டினம் காங்கிரஸ் பிரமுகர்கள் சட்டமன்ற உறுப்பினருடன் சந்திப்பு.!

 



தஞ்சை மாவட்டம், சர்வேந்தர்ராஜன் பட்டினம்,ஆண்டிக்காடு ஊராட்சியில் உள்ள பகுதிகளில் மழைநீர் வீடுகளில் சூழ்ந்து காணப்பட்டது,மழை நீரை வெளியேற்ற மழைநீர் வடிகால்களை தூர் வாரி அகலப்படுத்தி ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கோரிக்கை வைத்தன் அடிப்படையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார் உத்தரவின்பேரில் ஜேசிபியை கொண்டு  வாய்க்கால்கள் சுத்தப்படுத்தி அகலப்படுத்தும் பணியில் ஒரு நாள் முழுவதும் பணி மேற்கொள்ளப்பட்டது்.மேலும்இதற்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா,காங்கிரஸ் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர்  நாகூர்கனி மற்றும் கருதா அசாருதீன் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமாரை நேரில் சந்தித்து சால்வை அணிவித்தனர்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளராக நாகூர்கனி நியமனம் செய்யப்பட்டதற்கும் வாழ்த்துகள் தெரிவித்தார்.






Post a Comment

Previous Post Next Post