மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சுதந்திர தின கொண்டாட்டம்..!

 


79ஆவது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சியின் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.

மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹிர் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்கள்.

சுதந்திரத்தின்அருமை குறித்தும்,சுதந்திரம் பெறுவதற்காக முஸ்லீம்களின் பங்களிப்பு குறித்தும் மாவட்ட துணைத்தலைவர் நிஜாமுதீன்  சிறப்புரையாற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் கிளை நிர்வாகிகள் நூருல்  இஸ்லாம், அப்துல்லா, சுபுஹானி, அப்துர் ரஹ்மான், அபுல் ஹசன் , ஜாபீர், ஜெய்லானி, அமர்தீன், ஜமீர்கான், ஷேக் அப்துல்லா மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.தேசிய கொடியேற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.


Post a Comment

Previous Post Next Post