நீடாமங்கலம் தண்டவாளத்தில் கிடந்த வாலிபர் சடலம்.!

 



நீடாமங்கலம் பகுதியில் ஒளிமதி என்ற இடத்தில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை ரயில்வே இருப்புப்பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தனிப்பிரிவு சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த வாலிபர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் இறந்தவரின் சட்டைப் பையில் நாகை -திருச்சி செல்வதற்கான ரயில் டிக்கெட் மற்றும் அருகில் பேக் ஒன்று கிடந்ததை போலீசார் கைப்பற்றினர்.

இதனால் அவர் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post