மல்லிப்பட்டினம் எஸ்டிபிஐ கட்சி நிர்வகித்து வந்த ஆம்புலன்ஸ் சமுதாய நலமன்றத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது. கட்சியின் நிர்வாக கூட்டத்தில் நவீன வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாங்க வேண்டும் என்கிற தீர்மானத்தின் அடிப்படையில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்குண்டான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனடிப்படையில் ஏற்கனவே சமுதாய நலமன்றத்தின் அன்பளிப்பில் மக்கள் சேவையில் ஈடுபட்டு வந்த ஆம்புலன்ஸ் மற்றும் அதற்குண்டான அனைத்து ஆவணங்களையும் சமுதாய நலமன்ற மூத்த நிர்வாகி உமர் அவர்ரகளிடம் எஸ்டிபிஐ கட்சியின் சேதுபாவாசத்திரம் ஒன்றிய துணைத்தலைவர் முகமது அஸ்கர் திரும்ப ஒப்படைத்தார்.
மேலும் இதனால் எஸ்டிபிஐ கட்சி மேற்கொண்டு வந்த ஆம்புலன்ஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment