தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அநியாயமாக கொலை செய்யபட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணியின் தந்தை, தம்பி மற்றும் குடும்பத்தினர்களை வீட்டிற்கு SDPI கட்சி மல்லிப்பட்டினம் GP கமிட்டி சார்பில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமையில் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
ஆசிரியை ரமணி கொல்லப்பட்ட நாளில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் கொடுத்த மனுவில் கூறியிருந்த கோரிக்கைகளில் சிலவற்றை அரசு நிறைவேற்றி இருந்தாலும் ஆசிரியை ரமணி வீட்டில் உள்ள ஒரு நபருக்கு அரசு வேலை தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு நிறைவேற்ற அரசுக்கு எஸ்டிபிஐ கட்சி சார்பில் அழுத்தம் கொடுப்போம் என்று கூறினார்கள் அதனடிப்படையில் BA (history ) படிப்பை முடித்திருக்கும் ஆசிரியை ரமணியின் தம்பிக்கு அரசு வேலை கிடைக்க முயற்சி செய்வோம் என்று கூறினார்கள்.
இதில் SDPI கட்சி மல்லிப்பட்டினம் GP கமிட்டி தலைவர் J. ஜவாஹிர், செயலாளர் A. ஹாமீம் பைசல், கிளை -1 பொருளாளர் A. சம்சுல் குதா, கிளை -2 செயலாளர் AJ. அப்துல்லாஹ் மற்றும் கிளை -2 நிர்வாகி சகாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment