சேதுபாவாசத்திரம் ஒன்றியகுழு நிறைவு கூட்டம்..!

 



தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழுவின் நிறைவு கூட்டம் புதன்கிழமை ஒன்றிய குழு தலைவர் முத்துமாணிக்கம் தலைமை நடைபெற்றது.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன்,சடையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கலந்துக் கொண்டார். கூட்டத்தில் அனைத்து தீர்மானம்  நிறைவேற்றிய பிறகு திமுக உறுப்பினர் வழ.அருள்நம்பி,அதிமுக உறுப்பினர் நாடியம் மதிவாணன்,மீனவராஜன், திமுக உறுப்பினர் பாமா செந்தில்நாதன்,சுதாகர் ஆகியோர் பேசினர். ஆணையர் நாகேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் ஆகியோர் பதிலளித்தனர்.

பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் கூறியதாவது கடந்த ஐந்தாண்டுகளாக சிறப்பாக பணியாற்றி ஒன்றியத்திற்கு புதிய அலுவலகத்தையும் பெற்றுள்ளார்கள்.கொரோனா காலத்தில் பொறுப்பேற்றாலும் சிறப்பாக பணியாற்றி முடிந்த அளவு பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்து இந்த ஒன்றியம் சிறப்பான ஒன்றியமாக திகழ்கிறது.விடுபட்ட பணிகள் தொடர்ந்து செய்யப்படும்.நீங்கள் அனைவரும் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றிட வாழ்த்துகிறேன் என்றார்.ஒன்றிய குழு தலைவர் முத்துமாணிக்கம் நிறைவுரையாற்றினார்.




Post a Comment

Previous Post Next Post