அஸ்ஸலாமு அலைக்கும்
மரண அறிவிப்பு
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மெய்ங்கார்ஷா அவர்களுடைய பேத்தியும் மர்ஹூம் துல்கர்ணை அவர்களுடைய மகளும் மர்ஹூம் அவுலியா முகமது அவர்களுடைய மருமகளும் சாகுல் ஹீது அவர்களின் மனைவியும்.
சாகுல் ஹமீது, மர்ஹூம் ஹாஜா அலாவுதீன்,அப்துல் ஜப்பார் துல்கர்ணை ஆகியோரின் மூத்த சகோதரியும்
முகமது ஆரிப், முகமது இஸ்மாயில், சகாபுதீன் இவர்களின் மாமியாரும்
அப்துல்லா, ஜகபர் சாதிக், நிஜார் முஹம்மத், தமீமுன் அன்சாரி அவர்களின் தாயாருமாகிய,
கமர் நிஷா அவர்கள் நேற்று 01/01/2025 இரவு 11:30 மணியளவில் நெசவுத்தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்
அன்னாரி ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (02/01/2025) மஹரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய ஜும்மா பள்ளி மயவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வெற்றிக்காக அனைவரும் துஆ செய்வோம்.
இறைவா அன்னாரை
மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்ரை) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!
அதிராம்பட்டினம் மரண அறிவிப்பு
Mallinews
0
Post a Comment