தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறப்பு.
அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் திறக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்கள்,அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலசங்கம் ஆகியோர் தொடர் கோரிக்கையை வைத்தனர்.
கோரிக்கையை ஒன்றிய அமைச்சகத்தில் வைக்கப்பட்டது,இதனடிப்படையில் புதியதாக அதிராம்பட்டினம் இரயில் நிலையத்தில் முன்பதிவு மையத்தை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அதிராம்பட்டினம் நகர்மன்ற தலைவர் தாஹீரா அம்மாள் அப்துல் கரீம்,நகர்மன்ற துணைத்தலைவர் இராம.குணசேகரன், அதிரை மேற்கு நகர செயலாளர் அஸ்லம்,ரயில்வே நல சங்க நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.
Post a Comment