தென்கிழக்கு வங்கக்கடலில் காற்று சுழற்சி உருவாகியுள்ளது, இந்த காற்று சுழற்சி படி படியாக வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் அருகே நகர்ந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் வரும் 9, 10, 11 தேதிகளில் மழை வாய்ப்பு உருவாகலாம்.
குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் பரவலாக மழை வாய்ப்பு உருவாகலாம்.
நாட்கள் நெருங்கும் போது தான் மழையின் அளவு இன்னும் தெளிவாக தெரியவரும்.
அதுவரை தமிழகத்தில் வரண்ட வானிலை தொடரும். இரவு, நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்படும்.
Post a Comment