ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமுதாயத்திற்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் செ. ஹைதர் அலி கலந்துகொண்டு ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு செய்தார்.
இந்நிகழ்வில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன், மாநில துணைத்தலைவர் O.M.A முஷாஹுதீன், மாநில துணைப் பொதுச்செயலாளர் மஞ்சக்குடி பாபு, மாநில செயலாளர் அதிரை அகமது ஹாஜா, மாநில தொண்டரணி செயலாளர் முகமது ரபீக், மாநில இளைஞர் அணி பொருளாளர் முகமது ரஹ்மானுதீன், மாநில மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர் நூர் முகமது ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதில் மாநில, மாவட்ட, நகர நிர்வாகிகள், பொதுமக்கள், ஜமாத்தார்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment