முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் கடந்தாண்டு பிப். 18-ம் தேதி மதுரை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
அனைத்து கிராமப்புற ஊராட்சிகளுக்கு இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில் சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் மல்லிப்பட்டினத்தில் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் ஊராட்சிமன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, வார்டு உறுப்பினர் நூருல் ஹமீது ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.
Post a Comment