தஞ்சை தெற்கு தமுமுக மமக மாவட்ட செயற்குழு கூட்டம்.!




 தமுமுக மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு  கூட்டம் அதிரை நகர அலுவலகத்தில் மாவட்ட தலைவர்  இத்ரிஸ் அகமது  தலைமையில் நடைபெற்றது. 

தஞ்சை தெற்கு மாவட்ட மமக துணை  செயலாளர் மதுக்கூர் Er. முகமது இலியாஸ்,  துணைச் செயலாளர் SMA சாகுல் ஹமீது,

தமுமுக மாவட்ட துணை செயலாளர் மதுக்கூர் புரோஸ்கான், தமுமுக மாவட்ட துணைச் செயலாளர்   அதிரை நைனா முகமது, மாவட்ட பொருளாளர் பட்டுக்கோட்டை ஜெகபர் அலி  மற்றும் நிர்வாகிகள் ஆகியோரின் முன்னிலையில்  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  

 தீர்மானங்கள்

1.தஞ்சை தெற்கு அதிகப்படியான உறுப்பினர்கள் சேர்ப்பது இன்று முடிவெடுக்கப்பட்டது. 

2.முக்கியஸ்தர்களை நேரில்   சந்திப்பது. 

3.18/01/2025 மதுக்கூர் தொடங்கி அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை மந்திரி பட்டினம் வரை மமக கொடியேற்றும் நிகழ்வு நடத்துவது.

4.வருகின்ற 21/01/2024 அன்று  மனிதநேய வணிகர் அணி உடைய  மாநில செயற்குழு கூட்டம் கொடைக்கானலில் நடைபெற உள்ளதால் அதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் மற்றும் வர்த்தக அணி உடைய செயலாளர் பொருளாளர் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர்கள் கலந்து கொள்வது. 

5.வருகின்ற 26/01/2025 குடியரசு தின விழா அன்று கொடியேற்றும் நிகழ்ச்சியும்  தஞ்சை தெற்கு மாவட்ட. சார்பாக ஒரு மருத்துவ முகாம் நடத்துவது என்று தீர்மானம் செய்யப்பட்டது.

இதில் அதிரை நகரம், பட்டுக்கோட்டை நகரம், மதுக்கூர் போரூர்,  மல்லிப்பட்டினம் ஊராட்சி  மற்றும்  நிர்வாகிகள் ஆகியோர்கள் இந்த மசூராவில் கலந்து கொண்டார்கள். இறுதியாக அதிரை  நகரத் தலைவர் S.அஸ்ஸலாம் அவர்கள் நன்றி உரையாற்றினார்.

    

                 

Post a Comment

Previous Post Next Post