அரசின் மெத்தனப் போக்கால் ஏற்பட்ட பள்ளத்தூர் அரசுமேனிலைப் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி கவிபாலா குடும்பத்தினரை சந்தித்து SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், பள்ளத்தூர் அரசு மேனிலைப் பள்ளி மாணவி கவிபாலா (த/பெ. கண்ணன்) பள்ளியில் உலக குடற்புழு தினத்தை முன்னிட்டு பெற்றோர் அனுமதியின்றி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கொடுத்ததன் விளைவால் மாணவி உயிரிழப்பு சம்பவம் மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.
அரசின் மெத்தனப் போக்கால் உயிரிழந்த சொக்கநாதபுரம் ஊராட்சி கொம்புகாரன் ஓடை கிராமத்தை சார்ந்த கண்ணன் மற்றும் பரிமளா பெற்றோரின் இரண்டாவது மகள் ஏழாம் வகுப்பு மாணவி கவிபாலா வின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கும் படி SDPI கட்சி சார்பாக கேட்டுக்கொண்டனர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முஹம்மது அஸ்கர், மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி தலைவர் ஜவாஹிர், மல்லிப்பட்டினம் கிராம பஞ்சாயத்து கமிட்டி செயலாளர் ஹாமீம் பைசல், முன்னாள் மாநில மீனவரணி செயலாளர் அப்துல் ரஹ்மான், மல்லிப்பட்டினம் கிளை-1 பொருளாளர்சம்சுல் குதா, மல்லிப்பட்டினம் கிளை -2 செயலாளர் அப்துல்லாஹ் மற்றும் கட்சி செயல்வீரர் சுபுஹாணி ஆகியோர் உடனிருந்தனர்.
அரசு பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது ஆளும் அரசின் மெத்தன போக்கை காட்டுகிறது. ஆகையால் அரசுக்கு கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
உயிரிழந்த ஏழாம் வகுப்பு மாணவியின் சகோதரி அசின் (12ம் வகுப்பு) மாணவிக்கு அரசு வேலை கொடுக்க ஆவண செய்ய வேண்டும்.மாணவியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ. 50 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும். அரசு சார்பாக ரூ. 5 லட்சம் வழங்கியது போதாது,மாணவியின் குடும்பத்தினர் வசிக்கும் வீடு சரியில்லாத காரணத்தினால் நத்தம் நிலத்திற்கு பட்டா வழங்கி வீடு கட்டித் தர அரசு ஆவண செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவும் அரசுக்கு வலியுறுத்தினர்.
.
Post a Comment