பஹ்ரைனில் இறந்த கரம்பயத்தை சேர்ந்தவரின் உடல் எஸ்டிபிஐ கட்சியின் முயற்சியால் சொந்த ஊரில் நல்லடக்கம்.!

 


எஸ்டிபிஐ கட்சியின் முயற்சியால் பஹ்ரைனில் இறந்தவரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

தஞ்சை மாவட்டம்,கரம்பயத்தை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, இவர் பெஹ்ரைனில் பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் அங்கே இறந்துவிட்டார்.பெஹ்ரைன் கரீம் முயற்சியால் அவருடைய உடல் தமிழகம் கொண்டு வந்து அதனை எஸ்டிபிஐ கட்சியின் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி மூலம் பெறப்பட்டு சொந்த ஊரான  கரம்பயத்திற்கு கொண்டு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அனுப்பி வைத்தார். இறந்த சத்தியமூர்த்தி குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டனர்.

மேலும் இறந்த சத்தியமூர்த்தியின் குடும்பத்தினரை எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் நிஜாமுதீன் ஆறுதல் கூறினார்,உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர உறுதுணையாக இருந்த எஸ்டிபிஐ கட்சிக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதில் துணைதலைவர் அகமது அஸ்லம்,பட்டுக்கோட்டை தொகுதி தலைவர் தீன்முகமது, அதிரை நகர துணை தலைவர் அக்பர் அலி,மற்றும் SDTU மாவட்ட தலைவர்ர யூசுப் ஆகியோர் உடனிருந்தனர்.







Post a Comment

Previous Post Next Post