தஞ்சை மாவட்டம்,பட்டுக்கோட்டையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 77வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கட்சி கொடியேற்றம்,பல்வேறு நல உதவிகள் நடந்துவருகின்றன.
அதன் ஒருபகுதியாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து நகரின் பல முக்கிய சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று சூரப்பள்ளத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா உருவ சிலைக்கு தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சேகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்வில் கட்சியின் மாநில,மாவட்ட,ஒன்றிய,நகர,பேரூர், கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்ததுக்கொண்டனர்
Post a Comment