மார்ச்.29 விடுமுறை நாளாக அறிவிக்க ஆட்சியருக்கு கோரிக்கை.!



ரம்ஜான் பண்டிகையொட்டி மார்ச்.29 சனிக்கிழமை விடுமறை நாட்களாக அறிவிக்க வேண்டுமென தஞ்சை ஆட்சியருக்கு காங்கிரஸ் பிரமுகர் கமால் பாட்ஷா கோரிக்கை.

தஞ்சை ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மார்ச்.12 அன்று விடப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடு செய்ய மார்ச்.29 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்து இருக்கிறார்கள்.

மார்ச்.30 அல்லது மார்ச் 31 ரம்ஜான் பண்டிகையாக இருப்பதால் சிறுபான்மையினர் அரசு ஊழியர்கள் தத்தமது பண்டிகை சார்ந்த பணிகளில் ஈடுபடுவதும், சொந்த ஊர்களுக்கு திரும்புவதும் சிரமமாகி விடும் ஆதலால் மாற்றாக அடுத்து வரக்கூடிய விடுமுறை நாட்களில் வேலை நாளாக அறிவிக்க வேண்டுமென தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்க்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா கோரிக்கை வைத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post