ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச்.29 விடுமுறையாக அறிவிக்க ஆட்சியருக்கு எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் கோரிக்கை.!

 


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் கடந்த 12.03.2025 அன்று கும்பகோணம் மாசிமகம் திருவிழாவை ஒட்டி, தஞ்சை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கு ஈடாக விடுமுறை நாளான 29.03.2025 சனிகிழமையை வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சுற்றறிக்கை விடுத்துள்ளது.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சிரமங்களைத் தவிர்க்கும் வண்ணம் தொடர் விடுமுறை வேண்டி கும்பகோணம் மாசிமக திருவிழா விடுமுறைக்கு ஈடாக வேலை நாளாக அறிவிக்கப்பட்ட 29.03.2025 சனிக்கிழமையையும் விடுமுறை நாளாக அறிவிக்க மாவட்ட ஆட்சியரை கேட்டுக்கொள்கிறேன் என எஸ்டிபிஐ கட்சி மாவட்ட தலைவர் நிஜாமுதீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post