பட்டுக்கோட்டை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த நபரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டார காவல் நிலைய
சூரப்பள்ளம் கிராமத்தில் செப்டம்பர், 2021-இல் ஆறுமுகம் என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் ஜேம்ஸ், மஞ்சுநாதன், பார்த்தா (எ) சதீஸ் மற்றும் காளிராஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தொடர்புடைய ஜேம்ஸ், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த ஐந்து மாதங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மீது பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் பிடிஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய ஜேம்ஸை பட்டுக்கோட்டை போலீசார் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
Post a Comment