தஞ்சை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மார்ச்.29 வேலை நாளை திரும்ப பெற்று விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் பகத் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு ஒன்றில் மார்ச்.12 ஆம்தேதி கும்பகோணம் மாசிமகம் திருவிழாவை ஒட்டி,தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறையாக ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.

அந்த விடுமறையை ஈடு செய்யும் வண்ணம் வருகின்ற மார்ச்.29 சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவித்து இருக்கிறார்கள். மாத இறுதியில் ரம்ஜான் பண்டிகையாக இருப்பதாலும் தொடர் விடுமுறையாகவும் இருப்பதாலும் பயண இடைஞ்சல்கள் மற்றும் ரம்ஜானை சிறப்பாக கொண்டாடும் வண்ணம் மார்ச் 29 அன்று விடுமுறையாக அறிவித்து வேறொரு விடுமுறை நாட்களில் பணி நாட்களாக அறிவிக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அப்துல் பகத் கோரிக்கை விடுத்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post