புதுப்பட்டினம் கடற்கரையில் இயற்கை எழிலுடன் மீசான் சட்ட நிறுவனம் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி.!



 தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் அருகே,புதுப்பட்டிணம் டெல்டா கடற்கரையில் மீசான் சட்ட நிறுவனத்தின் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.

இயற்கை எழிலுடன் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்ச்சியில் 14 ஊர் ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் அசன்முகைதீன், பொருளாளர் சேட் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

மேலும் இஃப்தார் நிகழ்ச்சிக்குப் பிறகு சிறு கலந்துரையாடல் நடைபெற்றது இதில் தஞ்சை தெற்கு மாவட்டத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்துவது சட்டக் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்துதல் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குதல்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வழக்கறிஞர்கள்,சட்டக்கல்லூரி மாணவர்கள்,மீடியாவை சேர்ந்தவர்களை மீசான் சட்டநிறுவனத்திற்குள் இணைப்பது சம்மந்தமாகவும் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்நிகழ்வை மீசான் சட்ட நிறுவனத்தின் நிறுவனர்கள் வழக்கறிஞர் நிஜாம்,வழக்கறிஞர் சஃபியா நிஜாம் ஆகியோர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் தஞ்சை,திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த வழக்கறிஞர்கள்,மீடியாவை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துக்கொண்டனர்.






Post a Comment

Previous Post Next Post