திமுகவில் முஸ்லீகளுக்கு ஓர வஞ்சகம் செய்யப்படுவதாகவும்,பேராவூரணி, சேதுபாவாசத்திரம் மற்றும் தஞ்சை தெற்கில் சிறுபான்மை மக்களுக்கு உரிய அங்கீகாரமும்,பொறுப்புகளில் பிரதிநிதித்துவம் கிடைப்பதில்லை என்கிற குற்றச்சாட்டை திமுகவிற்காக வலைதளத்தில் களமாடிவரும் ஜெயராமன் வெளிப்படுத்தியுள்ளார்.
திமுகவில் சிறுபான்மையினரை ஒர வஞ்சகம் செய்யும் தலைமை
அதிலும்
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் திமுகவில் ஒதுக்கப்படும் சிறுபான்மையினர்.
சிறுபான்மை ஓட்டு மட்டும் வேனும் ஆனால் அவர்களுக்கு பதவி மட்டும் வேனாம் ?
இது எந்த விதத்தில் நியாயம்????
தேர்தல் என வந்தால் சிறுபான்மையினர் வாக்கு அனைத்தையும் திமுகவிற்கு மட்டுமே வேண்டும் என செயல்படுவது.
அதே திமுகவில் உட்கட்சி தேர்தல் பதவி என வந்தால் சிறுபான்மையினர் பதவிக்கு வரவே கூடது என செயல்படுவது.
எந்த விதத்தில் நியாயம்.
பேராவூரணி, பட்டுக்கோட்டை தொகுதியில் அதிகமான சிறுபான்மையின மக்கள் வகித்து வருகின்றார்கள்.
அதில் 90% அதிகமான மக்கள் திமுகவிற்கு வாக்களிக்கின்றனர்.
ஆனால் நிர்வாகிகள் திமுகவில் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. சிறுபான்மையினரை மதிப்பதும் இல்லை.
மாவட்ட பொருளாளராக சிறுபான்மையினர் ஒருவர் இருந்தார் அவருக்கு நகரத்தில் பதவி கொடுக்கப்பட்டதன் பேரில் பொருளாளர் வேறு ஒருவருக்கு மாற்றப்பட்டது .
அந்த பதவியை வேறு ஒரு சிறுபான்மையினர் யாருக்காவது கொடுத்துருக்கலாம். அவ்வாறு கொடுக்கவில்லை ..
பேராவூரணி தொகுதியில் திமுகவின் வெற்றியை தீர்மானிக்கும் சிறுபான்மை மக்களுக்கு ஒன்றிய பதவி என்பது எட்டாக்கணியாக உள்ளது .
முக்கிய நிர்வாகிகள் ஒரு சிலர் சிறுபான்மை சார்ந்த கழகத்திரை தர குறைவாகவும் , கேவலமாகவும் பேசி வருகிறார்.
அது மட்டும் இல்லாமல் கழகத்தினர்க்கு எதிராக RSS, BJP, Admk நபர்கள் மூலம் கூட்டு சேர்ந்து பழி வாங்கும் சூழலில் நடந்து வருகிறார் ..
இவர்களுக்கு ஓட்டு மட்டுமே சிறுபான்மையினர் மக்களிடம் தேவை, கழக பொறுப்புக்கு வர கூடாது என செயல்படுகின்றனர்.
ECR பகுதியில் அதிகமான மக்கள் வசிக்கும் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை கூட்டம் நடைபெறும் போது மேடையில் அனைத்து சமுகத்தை சார்ந்த நிர்வாகிகள் இருந்தா தானே அது சமூக நீதி இந்த சமூக நீதி திமுகவில் கடைப்பிடிக்கபடுதா??
சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொது உறுப்பினர் கூட்ட மேடையில் சிறுபான்மை சமுகத்தை சார்ந்த மாவட்ட அமைப்பாளர் , மாவட்ட தலைவர் மாவட்ட பிரதிநிதி மாவட்ட துணை செயலாளர் அவர்களை மேடையில் அமர்த்தவில்லை அந்த அளவிற்கு அந்த நிர்வாகியின் ஆணவம், கழகத்தினரை ஒருமையில் பேசுவது , எல்லாத்திற்கும் ஓர் முடிவு இருக்கு அந்த முடிவில் தான் திமுகவின் வெற்றியே இருக்கு.
அவை விரைவில் திமுகவில் மாற்றம் இருக்கும் மாற்றம் இல்லையே இந்த நிலை நீடித்தால் திமுகவின் வெற்றி கேள்வி குறியாகும்.
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செயல்படுமா திமுகவின் தலைமை.
எதிர்பார்போடு கழக சிறுபான்மை மக்கள் ????
பேராவூரணி தொகுதி கடற்கரை கிராமத்தில் ஒரு கழக உடன்பிறப்பின் குமுறல்!!
Post a Comment