தஞ்சை தெற்கு மாவட்டம்,SDPI கட்சி அதிராம்பட்டினம் நகரம் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி நகர செயலாளர் ஃபாரிஸ் அகமது தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் வரவேற்புரை நகர தலைவர் அகமது இப்ராஹிம் ஆற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் நிஜாம் முகைதீன் சிறப்புரை ஆற்றினார்.
SDPI கட்சி தஞ்சை தெற்கு மாவட்ட துணைத் தலைவர் அஹமது அஸ்லம் மாவட்ட பொதுச் செயலாளர் முகமது புகாரி,மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அசாருதீன், மாவட்டச் செயலாளர் ரியாஸ் அஹமது,மாவட்ட பொருளாளர் முகமது அஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்
சிறப்பு அழைப்பாளராக அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவி.சேகர் மற்றும் தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர் மதன் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
அதிமுக நகர செயலாளர் பிச்சை, அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர் தாஹிரா அம்மாள் அப்துல் கரீம்,நகர் மன்ற துணைத் தலைவர் இராம.குணசேகரன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
மேலும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக நகர பொருளாளர் ஜமால் முஹம்மது தொகுத்து வழங்கினார். இறுதியாக நிகழ்ச்சியின் நன்றி உரை நகர துணைத் தலைவர் அக்பர் அலி ஆற்றினார்கள்
இந்த நிகழ்ச்சியில் ஜமாஅத்தார்கள், பொதுமக்கள் பெண்கள் குழந்தைகள் SDPI கட்சியின் செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment