மியன்மாரைக் கடுமையான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது.அண்டை நாடுகளான தாய்லாந்து, வியட்னாமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
அந்நாட்டின் தலைநகர் நேப்பிடோவின் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டன, கட்டடங்கள் சேதமடைந்தன. அதோடு, அண்டை நாடுகளான வியட்னாம். தாய்லாந்தில் பதறிப்போன மக்கள் கட்டடங்களிலிருந்து வெளியேறினர்.
தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கில் கட்டுமானத் தளம் ஒன்றில் கட்டடம் இடிந்து விழுந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது. அங்கு காயமடைந்தோரை மீட்கும் பணிகள் நடந்துவருகின்றன.
ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மியன்மாரின் சகாயிங் நகரின் வடமேற்குப் பகுதியை உலுக்கியது என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு அமைப்பு தெரிவித்தது. சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியை 6.4 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உலுக்கியது.
தென்மேற்குச் சீனாவில் உள்ள யுனான் மாநிலத்திலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக பெய்ஜிங் நிலநடுக்க அமைப்பு தெரிவித்தது. 7.9 ரிக்டர் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாகவும் அந்த அமைப்பு சொன்னது.
மியன்மாரில் நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். 1930லிருந்து 1956ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்நாட்டை ரிக்டரில் ஏழுக்கும் அதிகமாகப் பதிவான நிலநடுக்கங்கள் ஆறு முறை உலுக்கின. அதோடு, 2016ல் மியன்மாரை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியது
வீடியோ லிங்:
https://www.facebook.com/share/v/16CPfYPwoX/







Post a Comment