*இந்திய ராணுவ விமானி அபினந்தனை எப்போது விடுவிப்போம் ... பாகிஸ்தான் பரபரப்பு விளக்கம் ...!!!*

டெல்லி: பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கியுள்ள இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் எப்போது விடுவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்து இருக்கிறது. இவரின் விடுதலைக்காக இந்திய கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் வரலாம் என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இரண்டு நாட்டு வான் எல்லையில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகிறது.



இந்த நிலையில்தான் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டு உள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தானின் எப் -16 ரக போர் விமானத்தை துரத்திக் கொண்டு சென்ற போது, இந்த அசம்பாவிதம் நடந்து இருக்கிறது. பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இந்த விமானத்தை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதில்தான் அபிநந்தன் பிடிக்கப்பட்டார்.

விமானி அபிநந்தன் தமிழகத்தை சேர்ந்தவர். இவர் சென்னையில்தான் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் சிறைபிடிக்கப்பட்ட இவரின் விடுதலைக்காக இந்திய கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் துணை தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. அதேபோல் ஐநாவில் இதுகுறித்து முறையிட உள்ளது.

தற்போது அபிநந்தனை எப்போது வெளியே விடுவோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் குரேஷி விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது பேட்டியில், இந்தியா பாகிஸ்தான் இடையே கடுமையான பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்தியாவுடன் போருக்கு செல்ல விருப்பம் கிடையாது. இந்தியாவில் தாக்குதல் நடத்தவும் எங்களுக்கு விருப்பம் இல்லை.

Post a Comment

Previous Post Next Post