தினமும் ஒரு மருத்துவ தகவல்

கொழுப்புகள் நீக்கப்பட்ட

சுகர் ப்ரீஃ உணவுகளை போன்றே கொழுப்புகள் இல்லாத FAT-FREE உணவுகளும் உள்ளன. கொழுப்புகள் உடலில் மிதமான அளவு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், இவை செயற்கை முறையால் சுத்திகரிக்கப்பட்டால் பல்வேறு மோசமான விளைவை உண்டாக்கும். இவை தான் தசைகளை பாதித்து தசை வீக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.

க்ளுட்டன்
நாம் உண்ணும் உணவில் அதிக அளவில் க்ளூட்டன் சேர்ந்திருந்தால் அவை நம் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதிக்கும். க்ளுட்டன் சேர்ந்துள்ள உணவுகளை அதிக அளவில் சாப்பிட்டால் ஆரோக்கியத்தை முற்றிலுமாக பாதிக்க செய்து விடும். பார்லி, பிரட், கோதுமை ஆகியவற்றை அதிக அளவில் நாம் சாப்பிட கூடாது.

சோளம் சார்ந்த பதப்படுத்தப்பட்ட உணவுங்கள் நீங்கள் நினைப்பது போன்று ஆரோக்கியமானவை அல்ல. இவை தான் உங்களுக்கு ஆப்பு வைக்கும் உணவுகள். சோளத்தை பதப்படுத்தி சாப்பிடும் போது இவை இதய நாளங்களை பாதிக்க செய்கிறது. மேலும், சர்க்கரை நோய், புற்றுநோய், மூளை நோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்கும்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்


இன்றைய சூழலில் எதை சாப்பிடுகின்றோம் என்பதை கூட நாம் கவனிக்க தவறி விடுகின்றோம். குறிப்பாக உணவு விஷயத்தில் இந்த நிலை அதிகம் உள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகள் எவை என்பதை அறிந்து நாம் அவற்றை தவிர்க்க வேண்டும். இல்லையேல் முழு ஆபத்தும் நமக்கு தான்.


Post a Comment

Previous Post Next Post