தினமும் ஒரு மருத்துவ தகவல்

கவர்ச்சிகரமான கண்டெய்னர்களில் விற்பனையாகும் பாடி லோஷன், கிரீம் போன்ற அழகுத் தயாரிப்புகளைப் பார்த்தால் எல்லோருக்கும்தான் வாங்கிப் பயன்படுத்தலாம் என்ற ஆசை வரும். இது போன்ற தயாரிப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கவும் நாம் தயங்குவதில்லை. ஆனால், இவற்றில் எவ்வளவு வேதிப்பொருள்கள் இருக்கும் என்று யோசித்திருப்போமா?

கவர்ச்சிகரமான பேக்கேஜிங்கில் நாம் எளிதில் மயங்கி வாங்கிவிடுகிறோம், ஆனால் நம் வீட்டிலேயே கிடைக்கின்ற எளிய, சிறப்பான இயற்கையான பொருள்களை மறந்துவிடுகிறோம். ஆம்! எளிதில் கிடைக்கக்கூடிய, மலிவான தேங்காய் எண்ணெயைப் பற்றிதான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

முற்றிய தேங்க்காய்களுக்குள் இருக்கும் கொப்பரையில் இருந்து தேங்காய் எண்ணெய் எடுக்கப்படுகிறது. கொப்பரை எண்ணெய் என்றும் இதனை அழைக்கிறார்கள். இது உணவில் சேர்த்துக்கொள்ளக்கூடிய எண்ணெய், அதுமட்டுமின்றி உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கக்கூடியது.

ஹேர் கண்டிஷனராக: நம் வீட்டில் தாயோ, நமது பாட்டியோ தலைக்கு தேங்காய் எண்ணெய் தேய்ப்பதைப் பார்க்காதவர்கள் யாரிருப்பார்கள்!பல காலமாகவே நம் முன்னோர்கள் பின்பற்றிவந்துள்ளார்கள் என்றால், ஏதோ முக்கியக் காரணம் இருக்க வேண்டும். தலைமுடிக்கு சிறந்த கண்டிஷனராக தேங்காய் எண்ணெய் செயல்படுகிறது. இது மண்டைத் தோல் மற்றும் முடியின் வேர் முடிச்சுகளுக்குள் ஊடுருவிச்சென்று ஊட்டமளிக்கிறது. முடியை மென்மையாக்குகிறது, வலிமையடையச் செய்கிறது, ஆரோக்கியமாக்குகிறது. மென்மையான, பளபளக்கும் முடியைப் பெற, தலை குளிக்கும் முந்தைய நாள் இரவு தேங்காய் எண்ணெய் தெய்த்துக்கொள்ளவும்.

பாத வெடிப்பு: பாத வெடிப்பு மற்றும் குதிகால் வெடிப்புகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த மருந்தாகிறது. அதற்கு தேங்காய் எண்ணெயில் இருக்கும் குணப்படுத்தும் பண்பும் ஈரப்பதமூட்டும் குணமும் காரணமாகிறது. தினமும் தூங்கச் செல்லும் முன்பு, குதிகாலில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டால், பாதங்கள் மிகவும் மென்மையாகும்.

தோலில் இறந்த செல்களை அகற்ற: சொரசொரப்பான உப்பு, சர்க்கரை போன்றவற்றுடன் சேர்த்து தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றப் பயன்படும். இப்படி அகற்றும்போது, தோலுக்கு எந்தவித சேதமோ எரிச்சலோ ஏற்படாது. தேங்காய் எண்ணெயின் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்பும், உப்பின் தோலை உரசி இறந்த செல்களைச் சுரண்டி அகற்றும் பண்பும் சருமத்தை சுத்தமாகவும் மென்மையாகவும் மாற்றும்.தோலில் இறந்த செல்களை அகற்ற: சொரசொரப்பான உப்பு, சர்க்கரை போன்றவற்றுடன் சேர்த்து தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால் அது தோலில் இருக்கும் இறந்த செல்களை அகற்றப் பயன்படும். இப்படி அகற்றும்போது, தோலுக்கு எந்தவித சேதமோ எரிச்சலோ ஏற்படாது. தேங்காய் எண்ணெயின் இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்பும், உப்பின் தோலை உரசி இறந்த செல்களைச் சுரண்டி அகற்றும் பண்பும் சருமத்தை சுத்தமாகவும் மென்மையாகவும் மாற்றும்.

Post a Comment

Previous Post Next Post