தினமும் ஒரு மருத்துவ தகவல்

சந்தையில் எத்தனை தான் பழங்கள் இருந்தாலும் அடிக்கடி அனைவராலும் விரும்பி கொள்வனவு செய்யப்படும் பழங்களில் ஒன்று தான் இந்த வாழைப்பழம்.

மலிவாகக் கிடைக்கும் பழங்களில் ஒன்றாக வாழைப்பழம் காணப்பட்டாலும் அதில் பல சத்துக்கள் பொதிந்துள்ளது என்பதே உண்மை. எம்மில் பலருக்கு வாழைப்பழத்தின் அருமை பற்றித் தெரியாது என்றே கூற வேண்டும்.

அப்படி என்ன வாழைப்பழத்தில் இருக்கின்றது எனக் கேட்கின்றீர்களா?

01. உயர் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு மனஅழுத்தத்தை குறைக்கும் வல்லமை கொண்டது.

02. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.

03. தசைப்பிடிப்பு ஏற்படுவதைக் குறைக்கும்.


04. என்புகளை வலுவடையச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.


05. வாழைப்பழத்தில் உள்ள விட்டமின்
பி6, உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதோடு வெண்குருதி சிறுதுணிக்கைகளின் உற்பத்திக்கும் உதவி புரிகின்றது.

06. இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதை குறைக்கின்றது.


07. சிறுநீரகத்தில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் வல்லமை கொண்டது.

08. தோலில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படின் அந்த இடத்தில் வாழைபழத்தோலின் உட்பகுதியை பூசுவதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம்.

09. உடல் வெப்பநிலையை குறைக்கும் தன்மை உடையது. ஆகவே காய்ச்சல் ஏற்படும் நேரத்தில் வாழைப்பழத்தை உட்கொள்வது உத்தமம்.



Post a Comment

Previous Post Next Post