மல்லிப்பட்டினத்தில் இது சாலையா ..!! இல்ல .. நீர் பெருக்கெடுத்து ஓடும் ஏரியா ..!!

மல்லிப்பட்டினம் -இரண்டாம்புளிகாடு   சாலையில் உள்ள அரசு  மேல்நிலைப்பள்ளி முன்பாக பல நாட்களாக குடிநீர் தண்ணீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் தண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவது போல் ஓடுகிறது. இதனால் பள்ளி சென்று வரும்  மாணவ, மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் தினந்தினம் கடும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.மேலும், போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது.

மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவும் வேளையில் இதுபோன்று தண்ணீரை ஊராட்சி நிர்வாகம் வீனடிப்பது கண்டிக்கத்தக்கது.

இது குறித்து ஏற்கனவே ஒரு முறை செய்தி பதியப்பட்டது.

ஊராட்சி நிர்வாகம் இது வரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.

வெளியாகும் குடிதண்ணீர் கழிவு நீருடன், கலந்து மீண்டும் குடிநீர் குழாய் உடன் கலந்து விடும் அபாய நிலையும் உள்ளது . இதனால் தொற்று நோய் ஏற்படும் அவள நிலையும் உள்ளது.

ஊராட்சி நிர்வாகம் விரைந்து இந்த தண்ணீர் குழாயை சரிசெய்யும் பணியை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு;
                மல்லி நியூஸ் நிருபர்கள்,
                மற்றும், காதர் சுல்தான்,
                மல்லிப்பட்டினம்.




Post a Comment

Previous Post Next Post