சேதுபாவாசத்திரம் ஒன்றிய பாஜக செயலாளராக இருப்பவர் மல்லிப்பட்டினம் ராமர் கோயில் தெருவைச் சேர்ந்த இ.அம்மையப்பன் (35). இவர் தமது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் பற்றி தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தாராம் .
இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டதாம்.
இதன்பேரில், சேதுபாவாசத்திரம் போலீஸார் விசாரணைக்கு சென்றபோது, அம்மையப்பன், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து சேதுபாவாசத்திரம் காவல் உதவி ஆய்வாளர் தங்கவேல் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து அம்மையப்பனை கைது செய்தனர்.
Post a Comment