*கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப் பிரிவு 49 P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்யும் தேர்தல் ஆணையம் ..!! சர்கார் எதிரொலி ...!!!*

நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்கிறது தேர்தல் ஆணையம்.

கடந்த வருடம் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. இந்த திரைப்படத்தில் வெளிநாட்டிலிருந்து தேர்தலில் வாக்களிப்பதற்காக இந்தியா வருவார் விஜய். ஆனால் அவரது ஓட்டு வேறொரு நபரால் போடப்பட்டிருக்கும். அதாவது கள்ளஓட்டு பதிவுசெய்யப் பட்டிருக்கும். இதையடுத்து கள்ளஓட்டினை தடுக்கும் சட்டமான 49P சட்டப்பிரிவை கண்டுபிடித்து வழக்குத் தொடுப்பார் விஜய். இதைத் தொடர்ந்து திரைக்கதை பயணிக்கும். 49P எனும் சட்டப்பிரிவு இருப்பதே சர்கார் படத்தின் மூலம்தான் பொதுமக்கள் முதல் அரசியல்வாதிகள் வரை பெரும்பாலானோருக்கும் தெரியவந்தது.

இப்படியாக சர்கார் படம் பலருக்கும் விழிப்புணர்வூட்டும் விதமாக அமைந்ததையடுத்து, நாடாளுமன்றத் தேர்தல் தேதிகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது கள்ள ஓட்டுக்களை தடுக்கும் சட்டப்பிரிவு 49P குறித்து முதல்முறையாக விளம்பரம் செய்கிறது தேர்தல் ஆணையம். 49P தொடர்பான பிளக்ஸ்கள் பல இடங்களில் வைக்கப்பட்டு வருகிறது.

அதில், "உங்கள் வாக்கினை வேறு எவரும் பதிவு செய்துவிட்டால் கவலை கொள்ள வேண்டாம். சட்டப்பிரிவு 49P மூலமாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்து வாக்கு சீட்டின் மூலம் வாக்களிக்கலாம். கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், ஒய்வு ஊதிய ஆவணம், MP, MLA, MLC அலுவலக அட்டை, மத்திய மாநில அரசு அடையாள அட்டை, MGNREGA அட்டை, சுகாதார காப்பீட்டு அட்டை, NPR SMART CARD முதலிய ஆவணங்களில் ஏதேனுமொன்றை பயன்படுத்தி உண்மையான வாக்காளர் நீங்கள் என நிரூபணம் செய்து வாக்குச் சீட்டின் மூலம் வாக்களிக்கலாம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post