*தி.மு.க வின் தொகுதி பங்கீடு நிறைவு ..! ம.ம.க வுக்கு சீட் இல்லை ..!!*

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றது.     இது குறித்து திமுக தலைவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு நிறைவு அடைந்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  விசிக -2, சிபிஎம் -2, சிபிஐ -2, மதிமுக -1, ஐஜேகே-1, ஐயூஎம்.எல். -1, கொமதேக-1 என  கூட்டணி கட்சிகளுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  திமுக 20 தொகுதிகளில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை உள்ளது.   

ss

திமுக கூட்டணியில்  மமகவுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்ய இயலவில்லை.  அதனால் அவர்களிடம் தேர்தலில் ஆதரவை கோரியுள்ளோம்.  

   நாளை மறுநாள் முதல் திமுக கூட்டணியின் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும்.   உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது  குறித்து மதிமுக, விசிக கட்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும்’’என்று தெரிவித்தார்.  

Post a Comment

Previous Post Next Post