*கட்அவுட், பிளக்ஸ் பேனர் வைக்க தடை*

மதுரை : தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.


பிளக்ஸ், கட்அவுட் வைப்பது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கு ஐகோர்ட் மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் கட்அவுட், பிளக்ஸ் பேனர்கள் வைக்க தடை விதித்
துள்ளனர்.
மேலும். பொதுக்கூட்டங்களுக்கு அரசில் கட்சியினர் பொதுமக்களை கூட்டாக அழைத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்பவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது

Post a Comment

Previous Post Next Post