கோவை கனியூர் பார்க் கல்லூரி வளாகத்தில் தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சங்கத்தின் சார்பில் செய்தி வாசிப்பாளர் பயிற்சி அகாடமியின் (TSVS Academy) துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் தமிழ்நாடு மின்சாரம்,மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியை செய்தி வாசிப்பாளர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மல்லிப்பட்டினத்தை சேர்ந்த முகமது இஸ்மாயில் வரவற்புரை நிகழ்த்தினார்.
மேலும் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் கோவை கிளை ஒருங்கிணைபபாளராக பொறுப்பேற்றுக்கொண்ட இஸ்மாயிலை அமைச்சர் செந்தில் பாலாஜி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.




Post a Comment