இன்று தொடங்கிய பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ~ மல்லிப்பட்டினத்தில் இருந்து தேர்வு எழுதிய 106 மாணவ, மாணவிகள் ..!!*

தமிழ்நாடு முழுவதும் உள்ள தமிழக அரசின் பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளில் இன்று பத்தாம் வகுப்பிற்கான (2018-2019) பொதுத் தேர்வு தொடங்கியது. தஞ்சை தெற்கு மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 106 மாணவ, மாணவிகள் இராஜாமடத்தில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார்கள்.இதில் 52 மாணவர்களும் 54 மாணவிகளும் தேர்வு எழுதினார்கள். மற்றும் இதர பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அவர்களுக்குரிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். இன்று மொழிப் பாடமான தமிழ் தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.

Post a Comment

Previous Post Next Post