தமிழகமெங்கும் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு (12/04/2109) மத்திய சென்னை தொகுதியில் அமமுக, எஸ்.டி. பி. ஐ கூட்டணி சார்பில் போட்டியிடும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் தெஹலான் பாக்கவி அவர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க சென்ற முஸ்லிம் பெண்கள் மீது திமுகவை சேர்ந்த பரமசிவம் என்பவர் கொடூரத் தாக்குதலை அரங்கேற்றியுள்ளார்.
அண்ணாநகர் தொகுதி, மஞ்சகொல்லை பகுதியில், திருவீதி அம்மன் கோயில் தெருவில் திமுக வை சேர்ந்த பரமசிவம் தலைமையில் வந்த ரவுடிகள் பெண்கள் மீது இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.இதில் காயமடைந்த இரண்டு பெண்கள் அருகிலுள்ள கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து k3 காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment