மல்லிப்பட்டினம் குளத்தில் கொத்துகொத்தாக செத்து மிதக்கும் மீன்கள்

மல்லிப்பட்டினம் : பள்ளிவாசல்  குளத்தில் குப்பை கழிவுகள் கலப்பதால் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.,
மல்லிப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே  பள்ளிவாசல் அருகே குளமும்,ஆட்டோ,கார் ஸ்டாண்ட்  அமைந்துள்ளது.

 இப்பகுதி மக்கள் காலை, மாலை நேரங்களில் இந்த இப்பகுதியில் தான் ஒய்வு நேரத்தை கழிக்கின்றனர் .


 இதனை முறையாக தூர்வாரி பராமரிக்காததால், தூர்ந்து காணப்படுகிறது. மேலும், இந்த குளத்தின் அருகே  குப்பை கிடங்கு உள்ளதால், அங்கிருந்து காற்றில் குப்பை பறந்து குளத்தில் விழுகிறது. மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் விடப்படுவதால், நீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், குளத்தில் இருந்த மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.


இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,. தற்போது, கோடை காலம் என்பதால், குளம் வறண்டு குறைந்தளவு நீர் மட்டும் உள்ளது. இதனால், சுற்றுப் பகுதி வீடுகளில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து திண்டாடி வருகிறோம். இந்நிலையில், குளத்தில் கழிவுநீர் விடப்படுவதாலும், குப்பை விழுவதாலும் நீர் மாசடைந்து குளத்தில் உள்ள மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, இந்த குளத்தை தூர்வாரி, முறையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மல்லி நியூஸ் சார்பாக கேட்டுக்கொள்கிரோம்

Post a Comment

Previous Post Next Post