அதிரையில் விபத்து .! உடனே உதவிய மல்லிப்பட்டினம் இளைஞர்கள் ..!!

தஞ்சாவூர் மாவட்டம், அதிரை காதிர் முகைதீன் கல்லூரி முக்கத்தில் நேற்று இரவு (19/06/2019) அதிராம்பட்டினம் தரகர் தெருவைச் சேர்ந்த ஒரு பெரியவர் தொழுது முடித்து செல்லும் வேளையில், விபத்துக்குள்ளானார். அப்பொழுது அந்த வழியாக வந்த மல்லிப்பட்டினத்தை சேர்ந்த காதர் சுல்தான் மற்றும் நிஜாக் ஆகிய இரு இளைஞர்களும் உடனடியாக அவருக்குத் தேவையான முதல் உதவிகளை செய்து அதிரை த.மு.மு.க ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து அங்குள்ள பொதுமக்கள் அவர்களை பாராட்டினார்கள். மல்லி நியூஸ் சார்பாகவும் நமது இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

Previous Post Next Post