மல்லிப்பட்டினத்தில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு சுத்தம் செய்யப்பட்ட புதுக்குளம் ..!!

மல்லிப்பட்டினம் ஷாபி இமாம் தெருவில்  அமைந்துள்ள புதுக்குளம் பகுதி அருகே மிகுந்த சுகாதர சீர்கேடு ஏற்பட்டு இருந்தது.நாலாபுறமும் குப்பையும்,கூளங்களும் சிதறிக்காணப்பட்டன. இந்நிலை  சில வருடங்களாக நீடித்து வந்தது. அதனை சரிசெய்ய கட்சிகளும், இயக்கங்களும், மாணவர்களும், ஜமாஅத் நிர்வாகிகளும் பல கிராமசபை கூட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் P.D.O அதிகாரிக்கும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

மேலும் சுகாதர சீர்கேடு குறித்து முதல்வரின் தனிப்பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து ஊராட்சி அலுவலரின் உத்தரவின் பெயரில் புதுகுளம் பகுதி சுத்தம் செய்யப்பட்டது.

புதுகுளம் பகுதியை சுத்தம் செய்ய உத்தரவிட்ட PDO அதிகரிக்கும்,ஊராட்சி மன்ற தனி அலுவலர் தெட்சணாமூர்த்திக்கும் மல்லி நியூஸ் குழுமம் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இதுபோன்று மல்லிப்பட்டினத்தில் நிகழும் பல பிரச்சனைகளுக்கும் தீர்வு காணுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அதில், பள்ளிவாசல் அருகில் உள்ள சாலையை சீரமைத்து தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.





Post a Comment

Previous Post Next Post